கொரோனா வைரஸ் நீக்கும்- ஒரே நேர மிருத்யுஞ்சய் ஹோமம் மற்றும் விளக்கு வழிபாடு

உலகை அச்சுறுத்தி வரும் மிக கொடிய கொரோனா வைரஸால் உலகம் அமைதி இழந்து நிலைகுலைந்து வருகிறது. சீனாவில் ஊகான் நகரில் பரவிய இந்த கொடிய நோயால் பலரும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

63bd836415cf604526cbaf71757579c5

மிக விரைவாக பரவும் இந்த நோய் சமீப நாட்களில் இந்தியாவிலும் சிலருக்கு பரவி சில உயிர்ப்பலிகளை பார்த்து விட்டது. சீனாவை தொடர்ந்து இத்தாலியையும் பாதித்துள்ள இந்த நோய் பெரும் உயிர்ப்பலிகளை இத்தாலியில் ஏற்படுத்தி விட்டது.

அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.அரசு கடும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி நாளை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட இருக்கிறது.

கோவில்கள், தேவாலயங்கள் போன்றவை மூடப்பட்டிருக்கும் இந்த சூழலில் பலரும் எங்கும்செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரார்த்தனைக்கு எப்போதும் அளவிட முடியாத சக்தி உள்ளது.அதுவும் மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பிரார்த்தனை செய்தால் அதற்கு மகத்தான சக்தி உண்டு.

கொரோனா வைரஸ் நீங்கவும் உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழவும் மிருத்யுஞ்சய் ஹோமம், மற்றும் ஆயுள் விருத்தி ஹோமம் செய்யப்பட வேண்டும் என கூறுகிறார் காரைக்காலை சேர்ந்த தாந்த்ரீக வேத விற்பன்னர் பேராசிரியர் பண்டரிநாதன் அய்யா அவர்கள்.

இவர் காரைக்கால் வராஹி பிரத்யங்கிரா பீடத்தில் உலக மக்களின் நன்மைக்காகவும் ஒவ்வொருவரின் பிரச்சினைகள் தீரவும் வெற்றிலையாகம் செய்து வருகிறார்.இரண்டு மணி நேரம் இவர் செய்யும் யாகம் அவ்வளவு உக்கிரமானது. தெய்வ சக்திகள் இவர் செய்யும் யாகத்தீ ஜ்வாலையில் காட்சி அளிக்கும் அதிசயங்கள் நடந்தேறி உள்ளன. புகைப்படங்களை நீங்கள் இணையத்தில் பார்க்கலாம்.

இவர் கூறுவது என்னவென்றால் யாகம், ஹோமம் செய்ய தெரிந்த புரோகிதர்கள் நாளை மறுதினம் திங்கட்கிழமை 23.3.2020ல் மாலை 7மணியளவில் அமாவாசை திதியில் உலக நலனுக்காக கொரோனா வைரஸின் அழிவுக்காக எல்லோரும் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக ஆயுள் நிவர்த்திஹோமம், மிருத்யுஞ்சய் ஹோமம் முதலியவற்றை தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே செய்தால் மிகுந்த பலன் கிடைக்கும்.ஹோமம் தெரிந்த புரோகிதர்கள் இதை முயற்சி செய்யலாம். எல்லோரும் ஒற்றுமையாக ஒரே நேரமான இரவு 7மணிக்கு செய்ய வேண்டும் என்பதே விஷயம். அவரவர் வீட்டிலோ நிர்வகித்து வரும்சிறு கோயிலிலோ எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். மக்களை திரட்ட வேண்டிய அவசியமில்லை ஏனென்றால் அரசு அறிவுறுத்தியுள்ளபடி எங்கும் கூட்டம் சேர்க்க வேண்டியதில்லை. அதே 7 மணியளவில் அநேரத்தில் மக்கள் அனைவரும் குறிப்பாக, பெண்கள் வீட்டு வாசலில் விளக்கேற்றி தங்கள் வீட்டு பூஜையறையில் அனைத்து தெய்வங்களுக்கும் பூ புஷ்பம் சாற்றி அனைவரும் நலமாக இருக்கவும் உலகம் அமைதியாக இருக்கவும் இது போல கொரோனா பாதிப்புகள் நீங்கி உலகம் அமைதியடையவும் வழிபட வேண்டும்.

வேறு கோரிக்கைகளை இந்த பூஜையில் வைக்க வேண்டாம் எல்லோரும் ஒரே மாதிரியான இந்த கோரிக்கைகளை மட்டும் வைத்தால் போதுமானது.

பயத்தை விரட்டும் கந்த சஷ்டி கவசம், பாம்பன் சுவாமிகள் எழுதிய அவரின் நோயை விரட்டிய சக்தி வாய்ந்த சண்முக கவசம், கோள்களின் தாக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகளுக்காக சிவபெருமானைபோற்றும் கோளறுபதிகம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற தங்களுக்கு தெரிந்த சக்தி வாய்ந்த மந்திரங்களை இந்தகுறிப்பிட்ட நேரத்தில் ஒரே நேரத்தில் பாராயணம் செய்ய வேண்டும் என்பதே விசயம்.இதை அவரரவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே செய்ய வேண்டும். கோவில் குளங்கள் எங்கும் சுற்ற வேண்டிய அவசியமில்லை.தங்கள் வீட்டு பூஜையறையே சிறந்தது ஆழ்ந்த மனமார்ந்த பிரார்த்தனை தேவை.

யாரும் போட்டி இல்லாமல் ஒரே நேரமான இரவு7 மணிக்கு இந்த வழிபாட்டை ஒரே நேரத்தில் மேற்கொண்டால் அசாதாரண சூழல் நிலவி வரும் இவ்வேளையில் அனைத்து கொடிய வைரஸ்களும் நீங்கி பகவானின் கருணையால் உலகம் நலம் பெறும் என்பது நம்பிக்கை.

முயன்று பாருங்கள் ஒற்றுமையே பலம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.