கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் 15 நாட்கள் நீட்டித்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மேலும் 15 நாட்கள் நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன என்பது தெரிந்ததே. இந்த கட்டுப்பாடுகள் நவம்பர் 15ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் 15 நாட்கள் அதாவது நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை அடுத்து இது வரை அமலில் இருந்த கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அனைத்தும் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெங்கு மற்றும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் இந்த கட்டுப்பாடுகள் நீட்டித்துள்ளதாகவும் பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்றும் கடைகளில் பணிபுரிபவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து இருக்கவேண்டும் என்றும் தனி மனித இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் முதல்வர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment