கொரோனா வைரஸ் விலக கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் யாகம்

5a77d5880db0abb3706d46026aade758

கடந்த வருடம் ஆரம்பித்த கொரோனா வைரஸின் துயரம் ஒட்டுமொத்த உலக மக்களையும் விட்டு விலகுவதாய் இல்லை. இருப்பினும் பல இடங்களில் இறைவன் மேல் நம்பிக்கை வைத்து யாகங்கள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக குறைந்து இருந்த கொரோனா வைரஸ் மார்ச் மாத  இறுதியில் இருந்து அதிகம் பரவி வருகிறது.

தினமும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இராமநாதபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கொரோனா வைரஸ் விலக நேற்று அதிகாலை 4 மணியளவில் பூஜை நடைபெற்றது. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. சிவாச்சாரியார்கள் மட்டும் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு அலங்காரம் செய்து உலக மக்கள் நன்மை வேண்டி நோய் விலக யாகம் செய்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...