இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு: மேலும் ஒரு தடுப்பூசியா?

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உயிர் இழப்பும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் உச்சகட்டத்தில் இருப்பதாகவும் அங்கு கடந்த சில நாட்களில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சீனா ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா திரும்புபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் இதனை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 190 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்தியா முழுவதும் 3402 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.