சென்னையில் குறையாத கொரோனா பாதிப்பு.. மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு வருமா?

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினசரி 100 பேர்களுக்கும் மேல் இருந்து வரும் நிலையில் சென்னையில் மாஸ்க் அணிவது கட்டாயம் என கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் கடந்த சில நாட்களாக மாநில முழுவதும் 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

சில மாதங்களுக்கு முன்னர் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து தற்போது 500ஐ தாண்டி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே மாஸ்க் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். மாநிலம் முழுவதும் பொது இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்ற நிலையை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மாஸ்க் அணிதல், தனிமனித இடைவே ளையை கடைப்பிடித்தல் மட்டுமே கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் அம்சம் என்பதால் இதனை மாநில அரசு மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 532 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதில் சென்னையில் மட்டும் 113 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் கோவையில் 66 பேர்கள், செங்கல்பட்டில் 33 பேர்கள், பெயர்கள் கன்னியாகுமரிகள் 32 பேர்கள் திருவண்ணாமலையில் 25 பேர்கள் திருப்பூரில் 27 பேர்கள் நேற்று கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர்,. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றவர்களில் 469 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்பதும் நேற்று கொரோனா வைரஸால் எந்தவித உயிர் பலியும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மாநிலம் முழுவதும் 3,626 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் பொதுமக்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

corona april20

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.