தீயாய் பரவும் கொரோனா: நாடு முழுவதும் தயார் நிலை… தமிழகத்தில் இன்று நடக்கப்போகும் பரபரப்பு சம்பவம்!

இன்று நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவைக் கடந்து தற்போது கொரோனா பரவல் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கோரதாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளில் இருந்து வந்த 4 பேருக்கு பிஎஃப்7 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் கொரோனா தொற்று பரவி வருவதை தொடர்ந்து அதனை இந்தியாவில் தடுக்கும் வகையில் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இன்று நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பயிற்சி மையங்களில் இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சுகாதாரத்துறையின் தயார்நிலை ஒத்திகைக்கான வழிகாட்டு முறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

அதில் மருத்துவமனைகளில் உள்ள சுகாதார வசதிகள், நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்கான படுக்கை வசதிகள், மருத்துவ ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகளை ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவசர சிகிச்சைக்கான படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவி இணைக்கப்பட்டுள்ள படுக்கைகள், போதிய எண்ணிக்கையிலான மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள் குறித்து ஒத்திகையின் போது ஆய்வு செய்யப்பட உள்ளது.

மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கையையும், அங்குள்ள இயந்திரங்களை இயக்கத் தேவையான பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு நடத்தப்பட உள்ளது. மேலும் நவீன வசதி கொண்ட மருத்துவ வாகனங்கள், அத்தியாவசிய மருந்து பொருட்களின் கையிருப்பு, மருத்துவ உபகரணங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.