News
கொரோனா தடுப்பு மருந்து: சென்னை மருத்துவமனைகளில் பரிசோதிக்க அனுமதி!

உலகிலுள்ள மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாகவும் பரிசோதனையை தற்போது நடைபெற்று வருவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது
இந்த நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்டு என்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனை கட்டத்தில் தற்போது உள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு தடுப்பு மருந்தை சென்னையில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் பரிசோதிக்க தற்போது அனுமதி கிடைத்துள்ளது
இந்தியாவில் மொத்தம் 17 நகரங்களில் உள்ள மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பு மருந்து சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு மருத்துவமனைகள் சென்னையில் உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் சென்னை ராமச்சந்திரா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய இரண்டு மருத்துவமனைகளில் தான் இந்த கோவிஷீல்டு தடுப்பு மருந்தை பரிசோதிக்க தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் இரண்டாவது கட்ட மனித பரிசோதனையை தொடங்கபடுவதால் இந்த பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தால் இந்தியர்கள் அனைவருக்கும் இந்த தடுப்பு மருந்து கிடைக்கும் என்பதும் கொரோனா வைரஸை இந்தியாவில் இருந்து விரட்ட இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது
