News
அரசு அலுவலர்களுக்கு தடுப்பூசி கொரோனா! கொரோனா இரண்டாவது அலை வேகம்!
மக்கள் மத்தியில் கண்ணுக்கே தெரியாமல் அவரது உடலுக்குள் புகுந்து அவர்களுடன் அவர்களின் உடம்பை மிகவும் வேதனைப் படுத்துகிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனா முதன்முதலில் அண்டை நாடான சீனாவின் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா இருந்தது தெரியவந்தது.இதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உள்ளன. மேலும் ஒரு சில நாடுகளில் கொரோனா நோய்க்கு என்ன பண்ணுவது என்று தெரியாமல் மிகவும் குழப்பத்தில் இருந்தனர். கொரோனா நோயின் தாக்கம் ஆனது நமது இந்திய நாட்டிலும் வரத்தொடங்கியது.

இதனால் இந்திய அரசானது எந்த ஒரு நாடும் கையில் எடுக்காத முழு ஊரடங்கு திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இதனால் நோய் கடந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்நிலையில் கொரோனா நோயின் தாக்கம் ஆனது சில தினங்களாக தமிழகத்தில் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.மேலும் அந்த கட்டுப்பாட்டு விதிகள் ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவித்திருந்தது.
அதன்படி பொதுமக்கள் சமூக இடைவெளி முக கவசம் கட்டாயம் போன்றவைகளும் உள்ளது. தமிழக அரசு தற்போது பல தகவல்களை வெளியிட்டுள்ளது அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் அரசு அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காரணம் தமிழகத்தில் இரண்டாவது அலை அடுத்து தமிழக அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை உறுதிப்படுத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து துறைகள் சார்ந்த அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
