ஜனவரி 3இல் சிறுவர், சிறுமியர்க்கு கொரோனா தடுப்பூசி : அமைச்சர் மா.சுப்பிரமணியம்

இந்தியாவில் கொரோனா புதியவகை வைரஸான ஒமிக்ரான் அதிவிரைவாக பரவி வருவகிறது. அதை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று இரவு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி குறித்து சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 -18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், சிறுவர்களுக்கு பள்ளி அல்லது முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தலாமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். 60 வயதைக் கடந்தவர்கள், நோய்கள் உள்ள நபர்களும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம் என்றும் கூறினார்.

இன்று தமிழகம் முழுவதும் 16 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.  உலகில் சில நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவரப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ் நாட்டில் வாரம்தோறும் சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக கிறிஸ்துமஸ் சனிக்கிழமை வருவதால், அன்று நடைபெறும் தடுப்பூசி முகாம் அடுத்த நாள் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. இதனடிப்படையில் இன்று தமிழகத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இதே போல், அடுத்த வாரம் சனிக்கிழமை புத்தாண்டு என்பதால் மறுநாள் ஞாயிற்று கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் வாரம் தோறும் சனிகிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்துப்படும் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டை பெண்கள் நகராட்சி பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஜனவரி 10 முதல் முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள், 60 வயதைக் கடந்தவர்கள்  மற்றும்இணை நோய் உள்ளவர்களும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment