Connect with us

கொரோனா தடுப்பூசி தொடர்பாக மதத்தின் பெயரால் வன்மம் பரப்பும் மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை தேவை!- பாஜக செய்தி தொடர்பாளர்!!

narayanan thirupathy and mohan c lasarus

செய்திகள்

கொரோனா தடுப்பூசி தொடர்பாக மதத்தின் பெயரால் வன்மம் பரப்பும் மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை தேவை!- பாஜக செய்தி தொடர்பாளர்!!

கொரோனா தடுப்பூசி தொடர்பாக மதத்தின் பெயரால் வன்மம் பரப்பும் மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை தேவை!- பாஜக செய்தி தொடர்பாளர்!!

கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி கொள்பவர் ஆவார். ஹிந்து கோவில்கள் இருக்கும் இடங்களையும் அது இருக்கும் முக்கிய இடங்களான மதுரை, கும்பகோணம் ஆகிய இடங்களை தவறாக கூறி சர்ச்சையில் சிக்கினார்.

இப்படி ஏதாவது சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் இவர் சமீபத்தில் தடுப்பூசி பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மோகன் சி லாசரஸ் பேசியது இதுதான். தடுப்பூசி செலுத்தினால் பல பிரச்சினைகள் உருவாகும் என்று தான் சார்ந்த கிறித்தவ மக்களிடையே இவர் பேசியதாக தகவல் வெளியானது.

இந்த  நிலையில் மக்களிடையே தவறாக பொய் பிரச்சாரம் செய்து வரும் இது போல கிறித்தவ போதகர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி  செய்தியாளர்களிடம் கூறினார்.

மத்திய மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக மக்களை தூண்டி விடுவது மிகவும் மோசமான செயல் என்றும் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top