Connect with us

ஆந்திர முன்னாள் முதல்வருக்கு கொரோனா! தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்!!

chandrababu naidu

செய்திகள்

ஆந்திர முன்னாள் முதல்வருக்கு கொரோனா! தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்!!

ஆந்திர முன்னாள் முதல்வருக்கு கொரோனா! தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்!!

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் மீண்டும் அதிகமாக பரவி வருகிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு பரவிய கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா மிகவும் நுணுக்கமாக போராடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

ஆனால் எதிர்பாராத விதமாக டிசம்பர் மாதம் தொடங்கிய பின்னர் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சினிமா துறையினர் மத்தியில் கொரோனாவின் பாதிப்பு அடுத்தடுத்து வரிசையாக கண்டறியப்பட்டு வருகிறது.

இவர்கள் மட்டுமின்றி பல அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியிலும் கொரோனாவின் பாதிப்பு கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் அடுத்தடுத்த எம்எல்ஏக்கள் மத்தியில் கொரோனாவின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

லேசான அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

இருப்பினும் நேரடித் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார் அறிவுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top