பிக்பாஸ் தொகுப்பாளரை தொடர்ந்து சர்வைவர் தொகுப்பாளருக்கு கொரோனா!

தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங் என்ற அடைமொழியோடு இருப்பவர் நடிகர் அர்ஜுன். அர்ஜுன் நடிப்பில் வெளியான ஒவ்வொரு படத்திலும் சண்டைக் காட்சிகள் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

இந்த நிலையில் அர்ஜுன்  ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார். அதில் ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து இருந்தனர். அந்த நிகழ்ச்சியும் சில நாட்களுக்கு முன்பு இறுதியில் கொண்டதோடு நிறைவு பெற்றது.

இவ்வாறு கொண்டாட்டத்தில் இருந்த அர்ஜுன் மற்றும் நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆக்சன் கிங் அர்ஜுன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவர் மருத்துவர்களின் பரிந்துரையின் படி தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் ஆக்சன் கிங் அர்ஜூன், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment