திரும்பி ஆட்டத்தைத் தொடங்கும் கொரோனா…!! மேலும் ஒரு நகரில் கட்டுப்பாடு? சீன மக்கள் பீதி;
2019 ஆம் ஆண்டு யாரும் மறக்க மாட்டார்கள். ஏனென்றால் 2019ஆம் ஆண்டு சீனாவில் முதன்முதலாக கொரோனா என்ற வைரஸ் தோன்றியது. இது சீனா மாகாணம் முழுவதும் பரவி அங்குள்ள நாட்டில் உள்ள அனைவருக்கும் காணப்பட்டது.
இதனால் சீன மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். அதோடு மட்டுமில்லாமல் 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தென்படத் தொடங்கியது. அதுவும் குறிப்பாக இந்தியாவில் 2020ஆம் ஆண்டு மிகவும் மோசமானதாக காணப்பட்டது.
ஏனென்றால் பெரும்பாலான நாட்கள் ஊரடங்குகளிலேயே மக்கள் சந்தித்தனர். இவ்வாறு ஊரடங்கு, பல்வேறு கட்டுப்பாடு என அனைத்திலும் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடி மட்டத்திற்கு கீழே குறைந்து வருகிறது.
இவ்வாறு உள்ள நிலையில் மீண்டும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த கொரோனாவின் பாதிப்பு தனது தாயகமான சீனாவிலேயே மீண்டும் வர தொடங்கியுள்ளதாக காணப்படுகிறது.
இதனால் சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சீனாவில் ஒரே நாளில் மேலும் 3400 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் சீன மக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவில் ஏற்கனவே ஒரு சில நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு நகரில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
