தமிழகத்தில் வெகுவாக குறையும் கொரோனா: இன்றைய பாதிப்பு, பலி எவ்வளவு?

7f218d25b2692c4efd4e16927d535cc9-1

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது என்பதும் அதே நேரத்தில் குணமானவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தில் இன்றைய குர்ஆகொரோனா ன் வைரஸ் பாதிப்பு, பலி மற்றும் குணமானவர்கள் குறித்த தகவலை பார்ப்போம். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 1,819 என்றும், தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 25,46,689 என்றும் தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 27 என்றும், தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள் 33,889 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள் எண்ணிக்கை 2,583 என்றும், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 24,88,775 என்றும், தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,41,758 என்றும், தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 363.90.516 என்றும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

b338137c003713fbdf73c385d82a4172-1-2

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment