அடக்கடவுளே… பிரபல நடிகர் குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா பாதிப்பாம்….!

நம்ம திரைபிரபலங்களுக்கு என்னதான் ஆச்சு என்று கேட்கும் அளவிற்கு சமீபகாலமாக அடுத்தடுத்து திரைபிரலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். யார் கண் பட்டதோ தெரியவில்லை ரசிகர்களின் ஃபேவரைட் நடிகர் மற்றும் நடிகைகள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகைகள் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், ஷெரீன் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதேபோல் நடிகர்கள் சத்யராஜ், அருண் விஜய், விஷ்ணு விஷால், மகேஷ் பாபு ஆகியோர் பாதிக்ப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல நடிகர் உட்பட அவர் குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த நடிகர் வேறு யாருமல்ல சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான அன்பறிவு படத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான வில்லனாக வந்து நடிப்பு மூலம் மிரட்டியா நடிகர் விதார்த் தான். மைனா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான விதார்த் இந்த கேரக்டர் தான் என்றில்லாமல் அனைத்து கேரக்டரையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தான் அன்பறிவு படத்தில் அவர் வில்லனாக நடித்திருந்தார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள கார்பன் என்ற படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் விதார்த்தின் அம்மா அப்பா உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வீட்டில் தங்கியும், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்களாம். நடிகர் விதார்த் குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு ஒரே சமயத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள செய்தி என்ற தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment