மீண்டும் வீரியத்துடன் பரவ தொடங்கிய கொரோனா !! பீதியில் உலக நாடுகள்..
கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல கோடி மக்கள் பாதிப்படைந்தது மட்டுமில்லாமல் பல லட்சம் நபர்களின் உயிரையும் காவு வாங்கியது
இந்நிலையில் உலகளவில் மீண்டும் வீரியத்துடன் பரவ தொடங்கிய கொரோனாவால் 50 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 37 லட்சத்து 97 ஆயிரத்து 767 நபர்களாக அதிகரித்துள்ளது.
இதுவரையில் 62 லட்சத்து 20 ஆயிரத்து 322 நபர்கள் உயிரிழந்ததாகவும், 45 கோடியே 54 லட்சத்து 15 ஆயிரத்து 19 நபர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 கோடியே 37 லட்சத்து 59 ஆயிரத்து 900 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் மீண்டும் கொரோனா வைரஸ் தனது ஆட்டத்தை காட்ட ஆரம்பித்து விட்டதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளனர்.
