கட்டப்பாவையும் விட்டு வைக்காத கொரோனா…. இரண்டு நாட்களில் இத்தனை நடிகர்களா?

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடந்த நிலையில் சமீபகாலமாக தான் வெளியே நடமாட தொடங்கி உள்ளனர். ஆனால் தற்போது மீண்டும் கொரோனாவின் ஆட்டம் தொடங்கி விட்டது. கொரோனா மட்டுமின்றி ஒமிக்ரான் என்ற புதிய வகை தொற்றும் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சமீபகாலமாக கொரோனாவால் தமிழ் நடிகர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் விக்ரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகர் சத்யராஜும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாராம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 8981 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 4531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து செங்கல்பட்டில் 1039 பேரும், கோவையில் 408 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் பல நடிகர் நடிகைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் நடிகை திரிஷா, இயக்குனர் ப்ரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன், நடிகர் மகேஷ்பாபு தற்போது நடிகர் சத்யராஜ் என பலர் உள்ளனர். இரண்டு நாட்களில் இத்தனை நடிகர்களா என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கி உள்ள இந்த சமயத்தில் நடிகர் மற்றும் நடிகைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் பழையபடி படப்பிடிப்புகள் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக மாறும் நிலையும் உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment