செல்போனில் கொரோனா டெஸ்ட்: புதிய வசதி அறிமுகம்!

dccf6ddf2ac99dee68e9352c20fa49ac

செல்போனில் கொரோனா கண்டறியும் புதிய முறையை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பல முறை கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்கப்படும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 

இ.டி.இ என்று கூறப்படும் ஸ்கேனர்கள் மின்காந்த அலை மூலம் செயல்படும் சில்வர் நிறத்தாலான ஸ்கேனர் ஒன்று ஸ்கேன் செய்ய வேண்டிய இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் பொருத்தப்பட்டிருக்கும். அதன் தொடர்புடன் கூடிய ஒரு செல்போன் இணைக்கப்பட்டு அந்த செல்போனை வைத்து பொது இடங்களில் வரும் பொதுமக்களுக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியும்

அந்த செல்போன் மூலம் சம்பந்தப்பட்டவரின் முகத்தை ஸ்கேன் செய்தால் அதில் சிவப்பு லைட் எரிந்தால் கொரோனா பாதிப்பு இருக்கிறது என்றும் பச்சை லைட் எரிந்தால் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் புரிந்து கொள்ளலாம். இதனை அடுத்து கொரோனா உறுதியான நபர்களை பிசிஆர் சோதனை மூலம் கொரோனா இருக்கிறதா என்பதை மீண்டும் உறுதி செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த முறையை தற்போது அபுதாபியில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பாக வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment