இனி தமிழகத்திற்கு 12 நாடுகளிலிருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை!

தென்ஆப்பிரிக்காவில் தற்போது புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இதற்கு ஒமைக்ரான் கொரோனா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஒமைக்ரான் கொரோனா அச்சம் உலகமெங்கும் மெல்ல மெல்ல பரவி தொடங்கி உள்ளது.

ஒமைக்கிரான்

இதனால் ஒவ்வொரு நாட்டு அரசும் முறையான மருத்துவ சோதனைகளை செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நம் தமிழகத்திலும் ஒமைக்ரான் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி ஒமைக்ரான் கொரோனா  வைரஸ் பரவலால் 12 நாடுகளிலிருந்து தமிழகம் வருபவருக்கு பரிசோதனை கட்டாயம் எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெளிநாட்டு விமான பயணிகளை ஏழுநாள் தனிமைப்படுத்துதல் உட்பட 14 நாள் கண்காணிப்பில் வைத்திருக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி முதலில் தென் ஆப்பிரிக்கா, பிரேசில், சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, நியூசிலாந்து, ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு ஒமைக்ரான் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல், மொரிசியஸ், போட்ஸ்வானா, இங்கிலாந்து, வங்கதேசம், ஜிம்பாவே உள்பட 12 நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு ஆர்டி- பிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி புதிய கட்டுப்பாட்டு வழி காட்டு நெறிமுறைகள் நாளை முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment