சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியை குறிவைக்கும் கொரோனா! புதிதாக 61 பேருக்கு உறுதிசெய்யப்பட்டது கொரோனா பாதிப்பு!!

நேற்றைய தினம் உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகிய இருவரும் இணைந்து சென்று சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு முக்கிய தகவல்களை கூறியிருந்தனர்.

அதோடு மட்டுமல்லாமல் எம்ஐடி கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்த பட்டதாகவும் கூறினர். அதோடு மட்டுமல்லாமல் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மாணவர்களை காணொலிக் காட்சி மூலமாக நலம் விசாரித்தார்கள்.

இந்த நிலையில் சென்னை எம்ஐடி கல்லூரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் புதிதாக 61 பேருக்கு கொரோனா பாதிப்பு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறுள்ள நிலையில் புதிதாக அறுபத்தி ஒரு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 61 பேரில் 50 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக மருத்துவ துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளது பேரதிர்ச்சியை  உருவாக்கியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment