புதிய கொரோனா: தமிழக முதல்வர் திடீர் ஆலோசனை..!!!

நாட்டில் புதிய வகை கொரோனவைரஸ் பரவி வருவதையடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் சுமார் 12 மணியளவில் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அடுத்த 12 மணி நேரத்தில்! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு… வானிலை மையம் எச்சரிக்கை..!!!

இந்நிலையில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதன் படி, உருமாறிய பிஏஃப.7 வகை கொரோனா மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

இதனால் தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இதில் பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.

பதஞ்சலி உட்பட 16 மருந்துகளுக்கு தடை; நேபாள அரசு அதிரடி!!

அதே போல் தமிழகத்தில் இருக்கக்கூடிய விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு எடுக்கக்கூடிய பரிசோதனை மற்றும் தனிமனித இடைவெளி குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.

மேலும், இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.