தமிழ்நாட்டிடம் சரணடைந்த கொரோனா! 2 ஆண்டுக்கு பின் பாதிப்பு குறைவு!!!

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் இந்தியாவையே உலுக்கிய கொரோனா பாதிப்பு தற்போது காணாமல் போய்விட்டது போல காணப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு பின் 200-கீழ் பதிவாகியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதிக்கு பின்னர் தற்போதுதான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 200 -கீழ் பதிவாகியுள்ளது. 22 மாதங்களுக்குப்பின் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 200 க்கு கீழ் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 196 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 56 ஆயிரத்து 13 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 15 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்ட 2770 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமில்லாமல் சென்னையில் ஒருவர் மட்டும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment