கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை கூறியிருந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது. இத்தகைய அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதோடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் சிறார்களுக்கு 2022 ஆம் ஆண்டு முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஒன்றிய அரசு கூறியிருந்தது. அதன் தொடர்ச்சியாக ஜனவரி 3ஆம் தேதி இன்று நாடெங்கும் தடுப்பூசிகள் சிறார்களுக்கு செலுத்தப்படுகிறது.
இவை 15 முதல் 18 வயதுள்ள சிறார்கள் செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி மிக மும்முரமாக தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சிறார்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது. சிறார்களுக்கு கோவாக்சின் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.