வேகமெடுக்கும் கொரோனா; மாநிலங்களுக்கு பறந்த திடீர் உத்தரவு..!!

கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

உலக அளவில் கொரோனா பாதிப்பு குறைந்த போதிலும் சில நாடுகளில் கொரோனாவின் தொற்றானது  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வகையில் ஐப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் மாநிலங்களில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

அதன் போல் தொற்று பரவலை தடுப்பதற்காக பாதிக்கப்பட்ட நபர்களில் கொரோனா மாதிரிகளை உரிய நேரத்தில் ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து மாஸ் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் எனவும், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.