நேற்றைவிட இன்று பாதிப்பு குறைவு ! கொரோனா பாதிப்பு,உயிரிழப்பு, குணமடைந்தோரின் நிலவரம்!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பரவிய கொரோனா நோய் தற்போது மீண்டும் படிப்படியாக பரவத் தொடங்குகிறது. குறிப்பாக தமிழகத்தில் சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி தமிழகத்தில் மேலும் 1039 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா

ஆனாலும் இவை நேற்றைய மதிப்பை விட சற்று குறைவாகவே உள்ளது. ஏனென்றால் தமிழகத்தில் நேற்றைய தினம் 1061 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் இன்று 1039 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில்  ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 674 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதில் 1039 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. சென்னையில் மட்டும் 126 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை கூறியுள்ளது.

கோவையில் 118 பேருக்கும், செங்கல்பட்டில் 80 பேருக்கும், தஞ்சாவூரில் 42 பேருக்கும், திருவள்ளூரில் 33 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 11 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய தினம் 1229 பேர் கொரோனா குணமடைந்து வீடு திரும்பினார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா தொடர் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 850 ஆக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

24 மணி நேரத்தில் 11 பேர் இந்த கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 36083 ஆக உயர்ந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment