தமிழகத்தில் கொரோனா நிலவரம்: படிப்படியாக தமிழகத்தின் கைக்குள் வந்துவிட்டது!

உலகிற்கே மிகப்பெரிய அச்சத்தைக் கொடுக்கும் ஒரு வைரஸ் கிருமி என்றால் அதனை கொரோனா என்று கூறலாம். இவை இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் நாள்தோறும் இந்த கொரோனா பரவிக் கொண்டே வருகிறது.

கொரோனா

அதன் வரிசையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 715 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 28 ஆயிரத்து 350 ஆக காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 36 ஆயிரத்து 504 பேர் கொரோனாவால்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனைகள், வீடுகள், கண்காணிப்பு மையங்களில் 8155 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்றைய தினம் 117 பேருக்கு பாதிப்பு இந்த நிலையில் இன்று சற்று அதிகமாக காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் மட்டும் 101569 பேருக்கு கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் 748 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 26 லட்சத்து 83 ஆயிரத்து 691 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment