இந்தியாவில் கொரோனா நிலவரம்: 8318 பேருக்கு பாதிப்பு, 475 பேர் உயிரிழப்பு;

கண்ணுக்கே தெரியாமல் மனிதனுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது கொரோனா வைரஸ். தற்போது இந்தியாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. ஏனென்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் லட்சக்கணக்கில் இந்த கொரோனா  நோய்க்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை காணப்பட்டது.

கொரோனா

அதோடு பல ஆயிரக்கணக்கில் கொரோனா  நோயினால் பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8318 பேருக்கு இந்த கொரோனா புதிதாக பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இதனால்  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 465 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 927 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 121.06 கோடி டோஸ் கொரோனா  தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. ஆயினும் நம் இந்தியாவில் புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா பரவவில்லை என்பது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment