கொரோனா நிலவரம்: ஒருவழியாக உச்சத்திலிருந்த கொரோனாவை கட்டுப்படுத்தியது இந்தியா!

இந்தியாவில் வேகமாக பரவிய கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 6,984 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இந்தியாவில் கொரோனா தொற்றால் மேலும் 247 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா

இந்தியாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 76 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 87 ஆயிரத்து 562 ஆக உள்ளது.

இந்தியாவில் இதுவரை 3 கோடியே 41 லட்சத்து 46 ஆயிரத்து 936 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8168 பேர்  கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

நேற்றைய தினம் இந்தியாவில் 68 லட்சத்து 89 ஆயிரத்து 25 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை 134 கோடியே 61 லட்சத்து 14 ஆயிரத்து 483 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்றும் ஒன்றிய சுகாதாரத் துறை கூறியுள்ளது. அதிக பாதிப்பு, உயிரிழப்பை நிகழ்த்திய கொரோனா தற்போது இவ்வாறு குறைந்துள்ளது மக்களுக்கு பெரும் நிம்மதியை உருவாக்கியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment