இந்தியாவில் கொரோனாவின் நிலவரம்: பேரதிர்ச்சி; மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு!!

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக பரவியது  கொரோனா. ஆனால் இந்தியாவின் பெரு முயற்சியால் தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது.

கொரோனா

இருப்பினும் அவ்வப்போது கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் புதிதாக 8439 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை கடந்த 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் மேலும் 195 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 952 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு சிகிச்சைபெற்று வருபவர்களின் எண்ணிக்கையை 93733 காணப்படுகிறது.இந்தியாவில் இதுவரை 3 கோடியே 40 லட்சத்து 89 ஆயிரத்து 137 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9585 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இந்தியாவில் நேற்றைய தினம் 73,62,000 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியாவில் இதுவரை 129 கோடியே 54 லட்சத்து 19 ஆயிரத்து 975 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று ஒன்றிய சுகாதாரத் துறை கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment