கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் இருந்த கொரோனா தாக்கம் தற்போது தான் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இந்த நிலையில் முதன்முதலாக கொரோனா தோன்றிய நாடான சீனாவில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிறது.
இந்த பரபரப்பான நிலையில் தற்போது சீனாவில் ஊரடங்கு போடும் அளவிற்கு கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துள்ளது. அதன் படி சீனாவின் ஷாங்காய் நகரில் நாளை முதல் ஊரடங்கு நடைமுறைக்கு வரவுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.
அதன்படி சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துள்ளதன் காரணமாக நாளை முதல் ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனாவின் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
சீனாவின் மட்டுமன்றி தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனாவின் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டு வருகிறது வேதனையானதாக காணப்படுகிறது.