மீண்டும் சீனாவில் விறுவிறுவெனப் பரவும் கொரோனா.. ஊரடங்கும் போட்டாச்சு மக்களே!

2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 2.5 ஆண்டுகளைக் கடந்து உலகின் ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவியது. கோடிக்கணக்கிலான உயிர்களைக் காவு வாங்கிய கொரோனா வைரஸ் தொற்றினைக் குணப்படுத்தும் வகையில் மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கொரோனாவைக் கட்டுக்குள் வைக்கும் பொருட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் குறைந்த கொரோனாத் தொற்றால் ஊரடங்கானது 100 சதவீத கட்டுப்பாடுகளில் இருந்து படிப்படியாகத் தளர்த்தப்பட்டன.

கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என ஒவ்வொரு அலைகளையும் கடந்து தற்போது கொரோனாவில் இருந்து ஒவ்வொரு நாடுகளும் மீண்டுள்ளன.

இந்த நிலையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் கொரோனாத் தொற்றானது பரவத் துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக சீனாவின் ஷாங்காய் நகரத்திலும் அதனைச் சுற்றியுள்ள சில நகரங்களிலும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து பிற வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் எனப் பலவும் மூடப்பட்டுள்ளது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment