Connect with us

கொரோனா பரவல் எதிரொலி: பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு!!

school girls 30

தமிழகம்

கொரோனா பரவல் எதிரொலி: பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த சூழலில் பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கட்டாயம் முக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

அதே போல் அனைவரும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்துகொள்வதை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வகுப்புகள் முடிந்த பிறகும் வெப்ப பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top