
தமிழகம்
கொரோனா பரவல் எதிரொலி: கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு !!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து இருப்பினும் கூட சில மாவட்டங்களில் அண்மைக்காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் குறிப்பிட்ட சில மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் அடையாறு, தேனாம்பேட்டை, பெருங்குடி, கோடம்பாக்கம் மற்றும் அண்ணா நகர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையே ஏற்கனவே ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவியதை அடுத்து தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போது 93.74% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
