
தமிழகம்
கொரோனா பரவல் எதிரொலி: ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!
வேலூரில் முக கவசம் அணிவது சமூக இடைவெளி கடைபிடிப்பது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் என கூறியுள்ளார். பொது இடங்களில் இரு நபர்களுக்கு இடையே 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதே போல் அனைத்து வணிக கூடங்கள் மற்றும் உணவகங்களில் கை சுத்தம் செய்வது கட்டாயம் என்றும் நுழைவாயிலில் கைகளில் சுத்தம் செய்திடும் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் என கூறியுள்ளார்.
இந்நிலையில் பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணங்கள் பயன்படுத்துவதற்கு தடை என்றும் கூறியுள்ளார். திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 -ஆக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் பொதுமக்கள் இருத்தல் கூடாது என கூறியுள்ளார்.
மேலும், அனைவரும் 1,2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதால் கொரோனா இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி தென்பட்டால் மருத்துவமனைகளை அனுகிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
