Connect with us

கொரோனா பரவல்;; முதல்வர் இன்று ஆலோசனை..!

ஒமைக்ரான்

தமிழகம்

கொரோனா பரவல்;; முதல்வர் இன்று ஆலோசனை..!

கொரோனா பரவல்;; முதல்வர் இன்று ஆலோசனை..!

பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க தமிழக முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனையில் கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என்று ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.

தமிழகத்தில் இன்னும் 1.5 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருப்பதால் அவர்களுக்கு தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவ வசதிகளை உடனே செய்து தருதல் போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுதல், அதிகாரிகள் உரிய முறையில் கண்காணித்தல், தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதை அதிகரித்தல், பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிதல் போன்றவைகளை மேற்கொள்ள அறிவித்தது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top