கொரோனா பரவல்: மத்திய அரசு புதிய உத்தரவு!!
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சில தளர்வுகளை குறிப்பிட்டு இருந்தது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து யூனியன் பிரதேசம் நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கொரோனா தொற்று பாதிப்பு, பாதிப்பு விகிதம் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சி பெருவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை ரத்து செய்யுங்கள் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
