மீண்டும் கொரோனா பரவல்! புத்தாண்டு கொண்டாட தடை!

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போழுது மக்களிடையே கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட தனி வழிகாட்டுதல் நெறி முறைகளை அந்த மாநில அரசு வெளியிடயுள்ளது. வருவாய் துறை மந்திரி ,மற்றும் சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் உயர் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டாயமாக முகக்கவசம் அணிவது கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கைளை எடுப்பது என அனைத்து ஆய்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் முடிவுகள் எடுக்க பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

காப்பி குடித்தால் இதய நோய் வருமா? அபாய எச்சரிக்கை!

குறிப்பாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தனிமனித இடைவேளை கடைப்பிடிப்பது , சானிடைசின் செய்வது மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்ப்பது, குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டுள்ள இடங்களுக்கு செல்வதை குறைப்பது என தற்காப்பு நடவடிக்கைளை பின்பற்ற வலியுறுத்தியுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.