அச்சுறுத்தும் கொரோனா! 6 நாடுகளில் ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டாயம்..!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சீனா, ஹாங்காய், தாய்லாந்து, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயமாக ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இந்நிலையில் இந்தியாவிற்கு பயணம் செய்யும் பணிகள் 72 மணி நேரம் முன்பாக சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் இதன் அறிக்கைகளை ‘ஏர் சுவிதா’ தளத்தில் பதிவேற்றுதல் அவசியம் என மைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார்.

சம்பளம் கொடுக்காத விரக்தி! முதலாளி கதையை முடித்த வடக்கன்ஸ்!!

அதே போல் ரேண்டம் முறையில் 2% அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் குறிப்பிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சோதனை கட்டாயம் என கூறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று இந்தியாவில் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் வருகின்ற ஜனவரி 1ம் தேதி முதல் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.