மீண்டும் வேகமாக பரவுகிறதா கொரோனா?அமெரிக்காவில் பாதிப்பு அதிகரிப்பு

சீனாவில்  2019ல் வூகான் நகரில் பரவிய மிக கொடிய நச்சுக்கிருமியான கொரோனா வைரஸ் பல பாதிப்புகளை தொடர்ந்து உலகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது.

221 நாடுகளுக்கு கொரொனா பரவியுள்ள நிலையில் அதை கட்டுப்படுத்த முடியாது உலக நாடுகள் திணறி வருகின்றன.

தற்போது வேகமாக ஓமிக்ரான் தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் மிக வேகமாக மீண்டும் பரவி கோவிட் தொற்று ஒரு நாளைக்கு 1 லட்சத்தை தாண்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இங்கிலாந்து, இத்தாலி நாடுகளிலும் கொரொனா பரவல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில் இந்தியா கொரொனா பரவல் வேகத்தில் உலக அளவில் 9ம் இடத்தில் இருப்பது மட்டுமே தற்போதைய ஆறுதல்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment