போன வேகத்தில திரும்பி வந்த கொரோனா!! எதிர்பார்க்காத சீனா!!பள்ளிகள் மூடல்!!

உலக நாடுகளுக்கு பெரும் அச்சத்தை கொடுத்ததாக காணப்படுகின்ற கொரோனா முதலில் சீன நாட்டில் தான் கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் பல நாடுகளுக்கு பரவியதாகவும் கூறப்பட்டிருந்தது.

கொரோனா

இருப்பினும் இந்நோயினை அந்த நாடு சில நாட்களாக கட்டுப்படுத்தி இருந்த நிலையில் தற்போது எதிர்பாராதவிதமாக கொரோனா தாக்கம் மீண்டும் சீனாவில் பரவத்தொடங்கியது. இதனால் சீனாவில் பள்ளிகள் மூடப்பட்டு, விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக காணப்படுகிறது.

சீனாவில் மீண்டும் கொரோனா பரவியதை அடுத்து அனைத்து பள்ளிகளையும் மூட சீன அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து 5வது நாளாக கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்தது சீனா.

கொரோனா பரவக்கூடிய இடங்களை கண்டறிந்து வட்டார அளவில் முழு முடக்கத்தை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பரிசோதனைகளையும் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது சுகாதாரத்துறை.

வெளிநாடு ஒன்றில் இருந்து சுற்றுலா வந்தவரிடம் இருந்து தான் மீண்டும் சீனாவில் வந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. சுற்றுலா பயணிகள் சென்ற மாகாணங்களிலும் கண்காணிப்பு காணப்படுகிறது.

சாங்காய், லியான், இன்சு உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது சீன அரசு. வடமேற்கு சீனாவில் உள்ள லான்சூ நகரில் இருந்து கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இன்றி வெளியே வர தடை விதித்துள்ளது. மங்கோலியாவில், எந்த நகரத்தில் இருந்து மக்கள் வெளியேற தடை விதித்துள்ளது அரசு.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment