கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்துக்கு அரசு 182 கோடி ஒதுக்கீடு

கடந்த 2020ம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில் கொரோனா அலை பரவ தொடங்கிய நிலையில் இதுவரை பல ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

கடந்த 2020ஐ விட கடந்த 2021ம் வருடம் வந்த கொரோனாவின் உருமாறிய டெல்டா ப்ளஸ்தான் பல உயிர்களை பலி வாங்கியது.

முக்கிய சினிமா கலைஞர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள், ஆன்மிகவாதிகள் என யாரையும் இந்த கொரோனா கடந்த வருடம் விட்டு வைக்கவில்லை.

ஒவ்வொருவரும் தங்கள் நெருங்கிய உறவுகளை பறிகொடுத்தனர்.

இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 182 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் இதுவரை முப்பத்தி ஆறாயிரம்  பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்த திட்டத்தை கடந்த 8ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், இதற்காக தற்போது ரூ. 182 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment