Connect with us

ஆட்டம் போட்ட கொரோனா 50க்கும் கீழாக பதிவு! ஒரு உயிரிழப்பும் இல்லை!!

கொரோனா

தமிழகம்

ஆட்டம் போட்ட கொரோனா 50க்கும் கீழாக பதிவு! ஒரு உயிரிழப்பும் இல்லை!!

ஆட்டம் போட்ட கொரோனா 50க்கும் கீழாக பதிவு! ஒரு உயிரிழப்பும் இல்லை!!

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தை பெரும் பாடுபடுத்திய கொரோனா தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 50க்கும் கீழாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வெறும் 41 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. அதேவேளையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 70 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா வாயிலாக உயிரிழப்பு பதிவாகவில்லை என்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 75 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 16 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 475 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் சுகாதாரத் துறை கூறியுள்ளது. தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில்  கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை என்றும் சுகாதாரத் துறை கூறியுள்ளது. இதனால் தமிழக மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top