கொரோனா பரவலால் தமிழகத்தை போல புதுச்சேரியிலும் ஊரடங்கு

கொரோனா பரவல் ஊர் உலகத்தை வாட்டி வதைத்து வருகிறது.  மத்திய அமைச்சர்களுக்கு  கூட கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவலால் அனைத்து மாநிலங்களிலும் இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு  உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டை போலவே அருகில் இருக்கும் முக்கிய மாநிலமான புதுச்சேரியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இங்குள்ள அனைத்து உணவகங்களிலும் 50 சதவீதம் பேர் மட்டுமே உட்கார்ந்து உணவு சாப்பிட அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், வணிக வளாகம் போன்றவற்றில் 50 சதவீதம் மக்களே  இருக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment