தமிழகத்தில் கொரோனா தொற்று மிக அதிகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா தமிழாட்டிலும் பரவி வருகிறது.
இதில் உருமாறிய தொற்றான ஓமிக்ரான் பாதிப்பும் ஒரு சிலருக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று கூட மதுரை சிலைமானில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு பெண் தனது குழந்தைக்கும் குடும்பத்துக்கும் சேர்த்து சாணிப்பவுடரை கலந்து கொடுத்து விட்டதால் தாய் மகன் இருவரும் உயிரிழந்தனர்.
இது போல நிகழ்வுகள் நடப்பதால் கொரோனா பாதித்தோருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவ ரீதியாக உதவுவதோடு அவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் எனவும் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.