கொரோனா தடுப்பு நடவடிக்கை; முதலமைச்சர் நாளை ஆலோசனை !!
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் சென்னை கிண்டியில் ஐ.ஐ.டி வளாகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் தொற்று மேலும் பரவாமல் இருக்க மாநில சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கு மக்கள் கூடக்கூடிய இடங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே சென்னை ஐஐடி- யில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வந்ததால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதுதாக தெரிகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க துறைவாரியாக நாளை முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது.
