பிரபல நடிகருக்கு கொரோனா பாசிடிவ்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!

நாடு முழுவதும் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஓராண்டுக்கும் மேலாக ஊரடங்கு பிறப்பித்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளான நிலையில் தற்போது மீண்டும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக தற்காலிக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 அருண் விஜய்

இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவருக்கு கொரோனா பாசிடிவ் ஏற்பட்டுள்ளதாக அவரே கூறியுள்ளார். ஏற்கனவே தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர் விக்ரம் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது இளம் நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரே கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வந்த அருண்விஜய் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வந்தது.

தற்போது அவரது கைவசம் பார்டர், ஓ மை டாக், அக்னி சிறகுகள், பாக்சர், சினம், யானை போன்ற பல படங்கள் உள்ளன. இதில் யானை படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அருண் விஜய் தனக்கு கொரனோ தொற்று உறுதியாகியுள்ளதாக டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவரின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். அனைவரது அன்புக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து தமிழ் நடிகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment