மதுரை சிலைமானில் கொரோனாவுக்கு பயந்து விஷமருந்திய ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்- 2 பேர் பலி

கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா அறிகுறிகள் தெரிந்தபோதும் கடந்த வருடம் டெல்டா வைரஸ் பரவியபோது ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் அலட்சியப்படுத்தியவர்கள் அதிகம் .

இதனால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டு என்றாலே பயப்படும் சூழலே பொதுமக்களிடம் அதிகம் உள்ளது.

மதுரை சிலைமான் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த  நாகராஜன் மகள் ஜோதிகா என்பவருக்கு இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மனம் உடைந்து இருந்தார்.

இதில் தற்கொலை செய்து கொள்ளலாம் என இவர்கள் தவறான முடிவையும் எடுத்துள்ளனர். இதன்படி சாணிப்பவுடரை வாங்கி கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதில் ஜோதிகாவும் அவரது 3 வயது மகன் ரித்திசும் உயிரிழந்தனர்.

மேலும் ஜோதிகாவின் அம்மா லட்சுமி, சகோதரர் சிபிராஜ் போன்றோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் மதுரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பயந்து யாராவது இறந்து போவார்களா எனவும் மக்கள் பேசி வருகின்றனர். இருப்பினும் இது போல மக்களை காக்க அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாய் இருக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment