Connect with us

கொரோனா நோயாளிகள் குறைந்து வருகிறார்கள்-ஆனால் இரண்டாவது டோஸ் தான் அதிகம் செலுத்த மாட்டேங்கிறாங்க!

கொரோனா

செய்திகள்

கொரோனா நோயாளிகள் குறைந்து வருகிறார்கள்-ஆனால் இரண்டாவது டோஸ் தான் அதிகம் செலுத்த மாட்டேங்கிறாங்க!

கொரோனா நோயாளிகள் குறைந்து வருகிறார்கள்-ஆனால் இரண்டாவது டோஸ் தான் அதிகம் செலுத்த மாட்டேங்கிறாங்க!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகும் விகிதமும் அதிகரித்து கொண்டே வருகிறது.

இருப்பினும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தினம்தோறும் மருத்துவமனைகளில் ஆய்வு செய்யப்படுகிறது. அந்த நிலையில் இன்று ஆய்வு செய்த பின்பு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

அதன்படி 1.13 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் கூறினார். ஆக்சிசன் படுக்கை நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதனால் கொரோனா  நோயாளிகள் குறைந்து வந்தாலும் இரண்டாம் தவணை தடுப்பூசி தடுத்துக்கொள்ளாதவர்களின் எண்ணிக்கை என்னமோ அதிகமாகவே காணப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top