Connect with us

கொரோனா தொற்றால் இறந்தவரை நாய் கடித்து குதறிய கொடூரம்: அதிர்ச்சி தகவல்

News

கொரோனா தொற்றால் இறந்தவரை நாய் கடித்து குதறிய கொடூரம்: அதிர்ச்சி தகவல்

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த ஒருவரின் உடல் குப்பைத் தொட்டி அருகே இருந்த நிலையில் அவரது உடலை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திர மாநிலம் பிரகாசம் என்ற மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் திடீரென அவர் பிணமாக மருத்துவமனை வெளியே உள்ள குப்பைத் தொட்டி அருகில் காணப்பட்டார். அவரது உடலை நான்கு நாய்கள் கடித்து குதறிக் கொண்டிருந்தன. இது குறித்து தகவல் அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நபரின் உடல் மருத்துவமனையில் இருந்து வெளியே வீசப்பட்டதா? அல்லது அவர் தானாகவே வெளியே வந்து கீழே விழுந்து இறந்தாரா என்பது குறித்து விசாரணை தற்போது நடை பெற்றுவருகிறது

கொரோனா தொற்றால் மரணம் அடைந்த முதியவர் ஒருவரின் உடலை நாய் கடித்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top