இறங்குமுகத்தில் கொரோனா! சென்னைக்கு மட்டும் தொடரும் சோகம்!!

கடைசி சில மாதங்கள் முன்பாக ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தன. தற்போது மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.

கொரோனா

அதன்படி தமிழகத்தில் புதிதாக 835 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் இவை நேற்றைய பாதிப்பு விட சற்று குறைவாக காணப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை கூறியுள்ளது.

அதன்படி நேற்றைய தினம் பாதிப்பு 841 பேருக்கு கொரோனா  இருந்ததும் குறிப்பிடத்தக்கது.  102350 கொரோனா  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 835-தாக காணப்படுகிறது.

தீபாவளி முடிந்த நிலையில் கடந்த 5 நாட்களாக ஒரு நாள் கொரோனா  பாதிப்பு குறைந்து வருவதாக மருத்துவ துறை தகவல் அளித்துள்ளது.தலைநகரான சென்னையில் மட்டும் இந்த பாதிப்பு சற்று அதிகமாக காணப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் புதிதாக 131 பேருக்கு கொரோனா  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்றையதினம் 126 பேருக்கு தான் இந்த கொரோனா நிலையில் சற்று இன்றைய தினம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.நாள் சென்னைக்கு மட்டும் அடுத்தடுத்து பாதிப்புகள் நிகழ்ந்து கொண்டுள்ளது கண்முன்னே தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment